கீழக்கரையில் 22 ஆண்டுகளுக்கு பின் கை கோர்த்த முகமது சதக் பாலிடெக்னிக் முன்னாள் மாணவர்கள்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 1994-97 ஆம் ஆண்டு டிப்ளமோ மாணவர்கள் 22 ஆண்டுகளுக்கு பின் கல்லூரியில் உறவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இதில், 1994 -97ல் பயின்று வெளிநாடுகளில் பணியாற்றுவோர், தொழிலதிபர்கள், பொறியாளர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் பணி புரிவோர் என தொழில் செய்யும் முன்னாள் மாணவ, மாணவியர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.அலாவுதீன் தலைமை வகித்தார். முன்னாள் துணை முதல்வர்கள் என்.நவநீத ராஜன், ஐ.கமால் அப்துல் நாசர், பேராசிரியர்கள் அயூப்கான், முகமது சலீம், கணித பேராசிரியை உமையாள் ஆகியோர் வாழ்த்தினார்.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் தங்கள் கல்லூரி கால வாழ்க்கையை நினைவு கூர்ந்தனர். வாழ்க்கையில் எப்படி முன்னேறினோம், தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என ருசிகரமாகவும், அந்தந்த நகரங்களுக்கேற்ற வட்டார தமிழ் உச்சரிப்பில் பேசினர். முகமது சதக் பாலிடெக்னிக் 1994-97ம் ஆண்டு மாணவர்கள் “உறவுகள்” என்னும் அறக்கட்டளை உருவாக்கி, ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயில உதவ உள்ளதாக தெரிவித்தனர். அதற்கான லோகோவை (இலட்சினை) வெளியிட்டனர். பேராசிரியர்கள் எஸ்.பி.நாகராஜன்,அக்பர் அலி ராஜா, நசுருதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கே.முருகன், கலைச்செல்வி சரவணன், எஸ்.எஸ்.சரவணன், அரசு பணியாளர் சோ.மு.பூபதி குமார், இன்ஜினியர் க.திருமுருகன் ஆகியோர் செய்தனர்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image