பொங்கல் பரிசுத்தொகுப்புதேதி அறிவிப்பு.!

தமிழக நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது.

தமிழகத்தில் உள்ள பொது வினியோகத்திட்ட ரேஷன் கடைகளில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. வழக்கமாக ரேஷன் கடைகளுக்கு 10-ந் தேதி (இரண்டாம் வெள்ளிக்கிழமை) வாராந்திர விடுமுறை நாளாகும். ஆனால் பொங்கலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் 10-ந்தேதி ரேஷன் கடைகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. வேலை நாளாக அறிவிக்கப்பட்ட 10-ந்தேதிக்கு பதிலாக, வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) ரேஷன் கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image