நமது இலக்கு 2030 அப்துல் கலாமின் கனவை நனவாக்குவோம். தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சபதம்.!

நமது இலக்கு 2030 அப்துல் கலாமின் கனவை நனவாக்குவோம். தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சபதம்.!

2020 ம் வருடத்தில் அடியெடுத்து வைத்து விட்டோம் ஆனால் அப்துல் கலாமின் கனவு வெறும் கானல் நீராக தான் உள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் 2030 க்குள் கட்டாயமாக அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுவோம் என சபதம் எடுத்துக் கொண்ட சம்பவம் பெரும் கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

 தூத்துக்குடி முத்தையா புரம் கே. டி. கோசல்ராம் உயர்நிலைப்பள்ளியில், நடைபெற்ற நிகழ்ச்சியில்.
2020 ம் வருடத்தில் அடியெடுத்து வைத்தும் சிறிதளவும் நிறைவேறாத கலாம் ஐயா அவர்களின் கனவினை 2030க்குள் கட்டாயமாக நிறைவேற்றுவோம் என மாணவ, மாணவிகள், மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள்,பல வண்ணக் கலவைகளை குழைத்து கைகளில் பூசி அட்டைகளில் அச்சு பதித்து சபதமேற்றுள்ளனர்.இந்நிகழ்ச்சியில்
பள்ளியின் முதுநிலை ஆசிரியை திருமதி விஜயலெட்சுமி தலைமை தாங்கிய விழாவில் சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. ஹேமா முரளிதரன் (கவிதாயினி. செந்தாமரைக்கொடி) முன்னிலை வகித்தார், திருமதி வரலஷ்மி நாகராஜன் CWCSWT பொள்ளாச்சி, Shine medical foundation நிறுவனர் திரு சோபிராஜன் நாகர்கோவில், திருமதி. மீனாட்சி, சமூக ஆர்வாலர் சென்னை, ஆகியோர் மற்றும் திரளான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் பூர்விக குடிமக்களின் குடியுரிமைகள் கேலிக்கூத்தாகவும், கேள்விக்குறியாகவும், மாறியுள்ள தற்போதைய சூழ்நிலையில், வித்தியாசமான முறையில் 2030 என்ற இலக்கோடு மாணவ மாணவிகள் களம் இறங்கியது நமக்கு ஆச்சரியம் அளித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் நமது நாடு 2030 ல் வல்லரசாக வாய்ப்பு உண்டா.? என்ற கேள்வியுடன்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த,
சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. ஹேமா முரளிதரன் அவர்களை நமது நிருபர் சந்தித்து பேசியபோது, ஹேமா முரளிதரன் கூறியதாவது.

2020 ம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்களின் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம் 2020ம் ஆண்டில் வல்லரசு நாடாக மாறி விடுவோம் என்று உறுதி படச் சொன்னவர். மறைந்த குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்.
ஐயாவின் கனவு வெறும் கனவாகி போனது என்று தோன்ற வில்லை. அது சற்று தள்ளிப்போய் உள்ளது என்பது தான் உண்மை. இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற இளைஞர்கள், இளைஞிகள்,மாணவ, மாணவிகள்,முன் வர வேண்டும்.

இந்தியாவின் தலைச் சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்கள், இளைஞிகள்,மாணவ, மாணவிகள், ஆகியோருக்கு முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த, அறிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கையை மிகப்பெரிய பாடமாக உள்ளது என்றால் அது மிகையாகாது.

ஆகையால் நமது நாட்டின் இளைஞர்கள், இளைஞிகள், மாணவ, மாணவிகள், அப்துல் கலாம் ஐயாவின் கனவை வெறும் கனவாக ஆக்கிவிடாமல் வரக்கூடிய 2030 ம் ஆண்டை இலக்காக வைத்து. ஜாதி, மத, மொழி, இன, பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து பாடுபட்டு இந்தியாவை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும் அதற்கு மத்திய மாநில அரசுகளும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாக இருக்கின்றது என தமது ஆசையையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image