Home செய்திகள் ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அமித்ஷா.!

ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார், அமித்ஷா.!

by Askar

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பொதுமக்களின் வீடுகளுக்குச் சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பிரசாரம் செய்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளது.

அந்த வகையில், இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை போக்கி மக்களிடம் விளக்க நாடு முழுவதும் 10 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட, பா.ஜனதா திட்டமிட்டது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று, மக்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா டெல்லியில் லஜ்பத் நகரில் துவக்கி வைத்தார். ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சட்டம் குறித்தும் பொதுமக்களிடம் விளக்கமளித்தார்.

காஜியாபாதில் ஜெ.பி.நட்டா, லக்னோவில் ராஜ்நாத்சிங், ஜெய்ப்பூரில் நிா்மலா சீதாராமன் ஆகியோர், வீடு தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!