அனுமதியின்றி நடந்த சூதாட்ட கிளப்கள் நேரடியாக களத்தில் இறங்கிய திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் 21 பேர் கைது .

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் அருகேயுள்ள தேசிய நான்கு வழிச்சாலை பகுதியில் கடந்த சில மாதங்களாக அரசு அனுமதியின்றி சூதாட்ட கிளப்கள் நடைபெற்று இயங்கி வந்துள்ளது, இந்த கிளப்புகளில் அடிக்கடி மோதல்களும் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பகுதியிலுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் இந்த கிளப்புகளில் சூதாட வரும் சூதாடிகளாலும் போதை ஆசாமிகள் ஆளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்துள்ளனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல்வேறு புகார் அளித்தும் அப்பகுதி காவல் துறையினர் கண்டுக் கொண்டதில்லையாம்,மேலும் கிராமங்கள் நிறைந்த இப்பகுதியில் சமீப காலமாகத் தான் இப்பகுதி காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை காவலரின் முழு ஆதரவோடும் அவர்களின் கண்ணசைவுகளிளே இப்பகுதி சூதாட்ட கிளப்புகள் இயங்கி வந்திருகின்றது,

இதனால் இப்பகுதி பொதுமக்களின் முயற்சி தொடர் தோல்வியிலேயே முடிந்துள்ளது . இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்க்கு நேரடியாக ஆதாரபூர்வமான தகவல் தெரிவிக்கப்பட்டு அதனடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல்   இரவு அதிரடியாக நேரடியாக சூதாட்டக் கிளப்புகளில் வந்து ஆய்வு செய்தன் அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தவர் காவல்துறையினர் கண்டதும் சிதறி ஓடினர். எனினும் திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர் போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த 21 நபர்களை கைது செய்தார்கள். அவர்கள் வைத்திருந்த 1 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பணம் 5 – கார்கள் 10-இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன இரவு நேரத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் திடீரென சூதாட்டக் கிளப்பில் வந்து ஆய்வு செய்தும் அங்கிருந்தவர்களை கைது செய்ததும் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image