குமரி மாவட்டத்தில் TNTJ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.!

குமரி மாவட்டத்தில் TNTJ மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.!

மக்களின் உணர்வுகளை மதிப்பளித்து தமிழகத்திலே NRC நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் எடுக்க வேண்டும்..

இலங்கை அகதிகளாக வந்திருக்கும் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை என்று தமிழக முதல்வர் கூறியுள்ளது ஒரு பசப்பு வார்த்தை. சட்டத்தை மாற்ற வேண்டுமே தவிர முதல்வரின் பேச்சையோ, மோடியின் பேச்சையோ அமித்ஷாவின் பசப்பு பேச்சையோ நம்புவதற்கு எந்த தமிழரும் தயாராக இல்லை.

போராட்டங்களை குறித்து பாஜகவினர் வேண்டுமென்றே ஒரு சாயத்தை பூசுகிறார்கள். அது தவறானது, நாட்டில் காஷ்மீர் உட்பட பல மக்கள் பிரச்சனை வந்த போதும் அமைதி காத்தார்கள், ஆனால் இதை இந்திய மக்களால் தாங்கி கொள்ள முடியாததால் தன்னார்வமாகவே மக்கள் போராடுகிறார்கள். இதை கொச்சை படுத்தும் பாஜகவிற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

வெவ்வேறு நாட்டிலிருந்து யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் முஸ்லிம்கள் மட்டும் வரகூடாது என்பது மனிநேயத்திற்கும், நாட்டின் குடியுரிமை சட்டத்திற்கும் எதிரானதாக கருதுகிறோம்.

கருப்பு பணத்தை ஒழிக்க போறோம் என்றும் இதனால் யாரும் பாதிப்படையமாட்டார்கள் என பொய்யான காரணம் கூறினார்கள், ஆனால் நாட்டின் அப்பாவிகள், ஏழைகள், என அனைவரும் மிக பாதிப்படைந்தனர். ஆக இவர்கள் கூறும் எந்த காரணமும் பொய்யாக தான் இருக்கும்.

நெல்லை கண்ணன் கைது என்பது தமிழக அதிமுக அரசு , பாஜகவினருக்கு, மத்திய அரசுக்கு பயந்து எடுத்த நடவடிக்கை. தவறாக பேசியதற்காக கைது செய்யவேண்டும் எனில் தமிழகத்தில் பாஜகவினரே முதல் பட்டியலில் இருப்பார்கள்.

இந்த கொடுஞ்சட்டத்திற்கு எதிரான தமிழகத்தில் எங்கள் போராட்டங்கள் ஓயவே ஓயாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த செய்குழு வாயிலாக அனைத்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து தமிழகத்தையே அதிர வைக்கும் பல போராட்டங்களை தொடர்ச்சியாக செய்வோம்.என
கன்னியாகுமரியில் 05/01/2020 இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழுவில் அதன் பொது செயலாளர் இ.முஹம்மது பத்திரிகை சந்திப்பில் பேட்டியளித்தார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image