கள்ளக்காதல் விபரீதம் குடும்பமே தீக்குளித்து தற்கொலை.!

கள்ளக் காதல் விவகாரத்தால் ஒரு குடும்பமே தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் தலவட்டி கிராமத்தில் அருண்குமார், மனைவி லதா மற்றும் 12 வயது மகள் வசித்து வந்தனர். அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த நிலையில் தகராறு வேண்டாம் தற்கொலை செய்ய முடிவு எடுத்தனர். இதையடுத்து மகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தம்பதி தங்கள் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டது.


தீப்பிடித்து எரிந்ததில் 3 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். 3 பேரும் தீயில் கருகுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தீயை அணைத்து அருண்குமார், அவரது மனைவி லதா மற்றும் மகள் அம்ருதா ஆகியோரை மீட்டு இரியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சித்ரதுர்கா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கும், மருத்துவமனைக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image