Home செய்திகள் வேலூர் பேர்ணாம்பட்டில் சாலையை சீரமைக்க கோரி தர்ணா போராட்டம்

வேலூர் பேர்ணாம்பட்டில் சாலையை சீரமைக்க கோரி தர்ணா போராட்டம்

by mohan

காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பேரணாம்பட்டு நகராட்சியின் முக்கிய வீதிகளான பஜார் வீதி, ஆஸ்பத்திரி வீதி, இசுலாமிய பள்ளி வீதி, மரித் வீதி, முஹம்மத் ராசா வீதி உள்ளிட்ட பல்வேறு வீதிகள் உடைக்கப்பட்டு போக்குவரத்திற்கே லாயக்கற்று, தினமும் பொதுமக்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. இதை புதுப்பித்து செப்பனிட கடந்த 2018 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு இதுவரை அந்த சாலைகள் சரிசெய்யப்படவில்லை. பலமுறை நகராட்சி அலுவலகத்திற்கு கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத நிலையில் இன்று பிற்பகல் பேரணாம்பட்டு பஜார் வீதி சவுக் மஸ்ஜித் எதிரில் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ் குமார், முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் மீரான்ஜி சலிம், அப்சல் பாஷா, அப்துல் ஹமீத், நகர இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் முத்தரசன், மக்கள் நல சேவா சங்க இணை செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட பலர் பழுதடைந்த சாலை மீது அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி ஆணையாளர்  நித்தியானந்தம், நகராட்சி பொறியாளர்  மனோகரன் உளள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிகமாக செப்பனிடும் பணியை துவக்கி, புது சாலை போடும் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் துவக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!