உசிலம்பட்டி பகுதியில் முதன்முறையாக ஓரே குடும்பத்தில் கணவனும் மனைவியும் இருவேறு பதவிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றிபெற்றவர்களை தேர்தல் அதிகாரிகள் அதிகாரப் பூர்வாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட போத்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வில்லாணி பெருமாள்பட்டியைச் சேர்ந்த உக்கிரபாண்டி (48) என்பவர் போட்டியிட்டு 958 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதே போல் இவரது மனைவி பாண்டியம்மாள் (44) அதே ஊராட்சியில் அதிமுக சார்பில் 9வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு இரட்டைஇலை சின்னத்தில் போட்டியிட்டு 2620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். ஒரே குடும்பத்தில் கனவன் ஊராட்சிமன்ற தலைவர் பதவியையும், மனைவி ஒன்றிய கவுன்சிலர் பதவியையும் தக்கவைத்துள்ளனர்.இதே போல் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குப்;பட்ட பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் திமுக சார்பில் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த முத்துராமன் என்பவர் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இவரது மனைவி ஜெயந்தி கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். உசிலம்பட்டியில் ஒரே குடும்பத்தில் கனவன் மனைவி முக்கிய பதவிகளில் வெற்றிபெற்றுள்ளது முதல் முறையாகும்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..