நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி கருத்தரங்கம்-தமிழ் மொழியில் கோப்புகளை சிறப்பாக கையாண்ட அரசு ஊழியர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தமிழ் ஆட்சி மொழிப் பயிலரங்கம்,கருத்தரங்கின் நிறைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டு சிறப்பாக தமிழ் மொழியைக் கையாண்ட துறைக்கு கேடயமும், தமிழ் மொழியில் சிறப்பாக கோப்புகளைக் கையாண்ட அரசு ஊழியர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கி நிறைவுரை ஆற்றினார்.முன்னதாக நெல்லை மண்டலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கா.பொ.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.இந்நிகழ்வில் பொதிகை தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறையின் திட்டங்கள் குறித்தும்,தமிழ் மொழியின் சிறப்பு,தொன்மை,வளர்ச்சி குறித்தும் கவிஞர். பேரா உரை நிகழ்த்தினார். மேலும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் சாதனை மலர் வழங்கப்பட்டு இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image