மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் உயர்த்தும் பா.ஜ.க முதல்வர்..!

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாஜகவை சேர்ந்தவரும் அஸ்ஸாம் முதல்வருமான திரு. சர்பானந்த சோனோவால் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளது. இதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேலும் தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.இந்தச் சட்டத்திற்கு, பா.ஜ.க., ஆளும் மாநில முதலமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த, அசாம் மாநில முதலமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் முதலாவதாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அசாமில் பிறந்தவன் என்பதால், மாநிலத்தில் வெளிநாட்டினரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இது, மத்திய பா.ஜ.க., அரசுக்கு தர்மச் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.மேலும் இந்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள்,மாணவர்கள் போராட்டங்களும் ஓய்ந்த பாடில்லை.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image