தூங்கும் மாநகராட்சி அதிகாரிகள். வீணாக செல்லும் குடிநீர்..

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 77 வது வார்டு திருப்பரங்குன்றம் தேசியநெடுஞ்சாலை டிவிஎஸ் நகர் ரயில்வே சுரங்கப்பாதை அருகே இஎஸ்ஐ மருத்துவமனை நுழைவாயிலில் பல மாதங்களாக மேலாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி சுரங்கப் பாதைக்கு உள்ளே செல்கிறது. சுரங்கப்பாதையில் மணல் அதிக அளவு உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மணலில் சிக்கி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. மேலும் பல ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக சுரங்கப் பாதைக்குள் செல்வதாலும் இஎஸ்ஐ மருத்துவமனை அருகே குடிநீர் தேங்கி நிற்பதால் டெங்கு கொசு உருவாகி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் இலவசமாக மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிக்கு கிடைப்பதாகவும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை இல்லை எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். தூங்கிக். கொண்டிருக்கும் அதிகாரிகளை ஆணையாளர் தட்டி எழுப்ப வேண்டும் எனவும் வேலை செய்யாத அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதான கோரிக்கையாக உள்ளது மதுரை மாநகராட்சி ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுப்பாரா??

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..