பெங்களூருல் புதுமை மற்றும் முனைவர் கருத்தரங்கம்.

பெங்களூருவில் உள்ள ரிவா(Reva) பல்கலைக்கழக மானது இந்திய அளவில் மற்றும் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளிடம் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புத்திறனை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக ஜனவரி 03, 04, 2020 இரண்டு நாள் கருத்தரங்கத்தை ஏற்படுத்தியதில், திருச்சிராப்பள்ளி மாவட்டம்,புத்தனாம்பட்டி, நேருநினைவுக் கல்லூரியை சேர்ந்தகு.ஜுவிதா மற்றும் இ.ஜோதிகா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும்,வீ.அகிலா மற்றும் ச.கற்பகம் பகலில் உற்பத்தியாகும் சூரிய மன்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும்,
க.தமிழரசன்,செ.சதிஷ்,ச.லோகேஷ் மின்சார இருசக்கர வாகனத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் எளிய முறையையும்,சு.முரளி நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் விளக்கி கூறினார்.

இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை மாணவர்கள் எடுத்துரைத்தனர்.மேலும் 2000த்துக்கும் மேற்பட்ட அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த கருத்தரங்கத்திற்கு தேவையான நிதி உதவியை தலைவர் பொன்.பாலசுப்ரமணியன் ,செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் A.R.பொன்பெரியசாமி ஆகியோர் செய்து வழியனுப்பி வைத்தார்.இதற்கு தேவையான வழிகாட்டுதல்களை ஆராய்ச்சி குழு டீன்.S.சசிகுமார், கல்விக்குழு உதவி டீன்.K.சரவணன் மற்றும் இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் ஆகியோர் செய்தனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..