தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்-நெல்லையில் வைகோ பேட்டி

சிறந்த தமிழ் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,அரசியல் புதிய வடிவம் எடுத்துள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் தற்போது கோலம் வடிவில் மாறியுள்ளது. கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் பெண்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு செய்கின்றனர். கருத்துச்சுதந்திரம் அடியோடு அழிக்கப்படுகிறது.மேலப்பாளையத்தில் பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவர் எப்போதும் நகைச்சுவையுடன் பேசக்கூடியவர். அவர் எந்தவித உள்நோக்கமும் இல்லாமல் தான் பேசினார். ஆனால் அதை பெரிதுபடுத்திவிட்டனர். எனவே நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை முன்பு பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்துகின்றனர். இது பா.ஜ.க.வினர் மனசாட்சி இல்லாதவர்கள் என்பதை காட்டுகிறது. இதன் மூலம் இங்கு பாசிச ஆட்சி நடைபெறுவது தெரிகிறது.இந்திய திருநாட்டின் ஒற்றுமை, பன்முக தன்மையை சிதைத்து இஸ்லாமியர்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டத்தை இவர்கள் நிறைவேற்ற நினைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.மேலும் அவர் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அவரிடம் கேட்கப்பட்டதற்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்த பிறகே அது பற்றி கருத்து கூறமுடியும் என்றார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..