உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக விவசாயிகள் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் இஸ்மாயில் சாகிப் பஜார் தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கினார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில் இராஜசிங்கமங்கலம் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் தர்வீஸ், பிலால், சாகுல் மற்றும் ஜே.ஆர்.சி அமைப்பினர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில், இந்தியா ஒரு விவசாய நாடு என்பது நாம் எல்லோரும் அறிந்ததே . எந்த ஒரு நாட்டிற்கும் பாரம்பரிய தொழில் என்று ஒன்று உண்டு . இந்தியாவிற்கு விவசாயத்தைப் போல அந்தந்த நாட்டின் வளர்ச்சியும் அவர்களின் பாரம்பரிய தொழிலைச் சார்ந்தே இருந்தால்தான் அந்த நாடு பொருளாதாரத்தில் திடமான வளர்ச்சி அடைய முடியும் . அதற்காக மற்ற துறைகள அனைத்தையும் ஒதுக்கி விடக்கூடாது, அது மிகவும் தவறு . ஆனால் நம்முடைய பாரம்பரிய தொழிலான விவசாயத்தில் முழுமையான கவனம் செலுத்தாமல் இருந்தோமேயானால் இந்தியா ஒருபோதும் நிரந்தர வளர்ச்சியைக் காண முடியாது. விவசாய வளங்களை மேம்படுத்துவதும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், விவசாயிகளுக்குத் தேவையான போக்குவரத்து, சந்தை போன்ற வசதிகள் செய்து தருவதும், அவர்களுக்கு இழப்பீடு, காப்பீடு என திட்டங்கள் வகுப்பதும் வளமான எதிர்காலத்திற்கு அவசியமாகும். இந்திய தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகளை கௌரவிக்கும் நிகழ்வுகளை மக்கள் பாதை முன்னெடுத்து வருகிறது என்பதை இளைஞர்களுக்கு எடுத்துரைத்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..