ஆரணி-புத்தாண்டையொட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி, ஒரு ரூபாய்க்கு புரோட்டா, அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்..

ஆரணி டவுன் பஸ் நிலையம் அருகேயுள்ள சைதாப்பேட்டையை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார்.புத்தாண்டையொட்டி ஒரு ரூபாய்க்கு இட்லி, ஒரு ரூபாய்க்கு புரோட்டா, அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த தகவல் ஆரணி முழுவதும் பரவியது. இதனால் இன்று அதிகாலை ஓட்டல் திறந்ததும் கூட்டம் அலைமோதியது.தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஒருவருக்கு 5 புரோட்டா, 5 இட்லி, ஒரு தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.வழக்கமாக இந்த ஓட்டலில் ஒரு இட்லி 5 ரூபாயும் ஒரு புரோட்டா 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஜெய்சங்கர் கூறுகையில்:-

ஆண்டு முழுவதும் லாபத்தில் வியாபாரம் செய்து வருகிறோம்.இதனால் புத்தாண்டுக்கு மட்டும் ஒரு ரூபாய்க்கு இட்லி, ஒரு ரூபாய்க்கு பரோட்டா, ஒரு ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வழங்கி வருகிறோம்.கடந்த 5 ஆண்டுகளாக சலுகை விலையில் புத்தாண்டு அன்று விற்பனை செய்து வருகிறேன். காலை முதல் 2000 புரோட்டா, 500 இட்லி, 100 தண்ணீர் பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது என்றார்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image