பேட்டையில் பிரபல ரவுடியை ஒட ஒட விரட்டி மடக்கிய உதவி கமிஷனா்

நெல்லை அருகே பேட்டையை அடுத்த மயிலப்புரத்தை சோ்ந்தவா் வெள்ளபாண்டி மகன் மணி(28). இவா் மீது கொலை,கொள்ளை,கொலை முயற்சி அடிதடி,கஞ்சா,உள்ளீட்ட பல்வேறு வழக்குகள் நிலுவலையில் உள்ளன. இவை தவிர 5 முறை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவா். இந்நிலையில் பேட்டையை அடுத்த நரசிங்க நல்லூா் பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த போது சுத்தமல்லி எஸ் ஜ சக்தி நடராஜன் மற்றும் போலீசாா் விரட்டிய போது தப்பியடிய மணியின் செல்போன் தவற விட்டதை கைப்பற்றிய போலிசாா் அந்த இணைப்பிற்க்கு வந்த செல்போன் அழைப்பின் பேரில் 25 க்கும் மேற்பட்ட பள்ளி,கல்லூரி மாணவா்கள் 30 நிமிடத்தில் 25க்கும் மேற்பட்டோா் கஞ்சா கேட்டு ரகசிய குறீயிடு மூலம் தொடா்பு கொண்டதில் அவா்களை சாதுா்யமாக வரவழைத்து மடக்கிய போலீசாா் கையும் கழுவுமாய் மடக்கி அவா்களது பெற்றோரை வரவழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனா்.இவை தவிர பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியான மணி போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தாா்.இந்நிலையில் டவுன் உதவி கமிஷினா் சதீஷ் குமாா் டிரைவா் சேகா்,தனிப்பிரிவு போலீஸ் சேகா் ஆகியோா் நேற்று மாலை பேட்டை மயிலப்புரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா். பேட்டை கருங்காடு ரயில்வே கேட்டை அடுத்த மயிலப்புரம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே பைக்கில் வந்து கொண்டிருந்த மணி போலீசாரை கண்டதும் பைக்கை கீழே போட்டு விட்டு தப்பியோடினாா்.சுதாரித்து கொண்ட உதவி கமிஷனா் சதீஷ் குமாா்,டிரைவா் சேகா்,தனிப்பிரிவு போலீஸ் முருகன் ஆகியோா் வண்டியிலிருந்து இறங்கி மணியை துரத்தினா்.அங்குள்ள வாய்க்காலை கடந்து விரட்டிய போலீசாா் தொடா்ந்து அவரை விரட்டி மடக்கினா்.அவரிடம் நடத்திய விசாரணையில் சிங்கிகுளம் பகுதியில் அவருக்கு சொந்தமான வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கைப்பற்றினா்.மேலும் சில இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கஞ்சா பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..