Home செய்திகள் இந்தியா எங்கள் தாய்நாடு. இஸ்லாம் எங்கள் வழிபாடு கோஷத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

இந்தியா எங்கள் தாய்நாடு. இஸ்லாம் எங்கள் வழிபாடு கோஷத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்..

by mohan

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீராணத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வீராணம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது.இஸ்லாமியர்களையும், ஈழ தமிழர்களையும் புறக்கணிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும் ஆளும் மத்திய பா.ஜ.க. மற்றும் அதிமுக அரசுகளை கண்டித்தும் வீராணம் முஸ்லீம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் 30.12.19 மாலை நடைபெற்றது.வீராணத்தில் உள்ள பள்ளி வாசலில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக வந்து ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜமாத் தலைவர் காஜாமைதீன் தலைமை வகித்தார். ஜமாத் துணை செயலாளர் முகமது உசேன்,கிளை துனை தலைவர் காதர் மைதீன்,மியாக்கண்ணு, தமுமுக மாநில செயலாளர்  நயினார் முகமது,எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் ஜாபர் அலி,உஸ்மானி,மம க மாவட்ட தலைவர் முகமது யாகூப் ஆகியோர் உரையாற்றினார்கள்.தமுமுக மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அப்துல் முதலிபு,ததஜ கிளை தலைவர் அம்சா மற்றும் காதர் மைதீன்,ஷாஜகான்,சிந்தா,முகமது ஆசிக்,முகமது அப்பாஸ்,சாதம் உசேன்,புகாரி,இப்ராஹிம்,வஹாப்,அமானுல்லா, அனீஸ் அகமது,ஹக்கீம் மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு என்றும்,இலங்கை தமிழர்களை வஞ்சிக்காதே என்றும்,மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.இந்நிகழ்வின் இறுதியில் எஸ்.டி.பி ஐ கிளை தலைவர் சேக் அப்பாஸ் நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுரண்டை இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி,ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சோல்வியா ,மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஸ்வரி, பாரத் லிங்கம், சந்திர சேகர் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!