வாசிப்பை நேசிக்க தூண்டும் பள்ளி. படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி..

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள் வழங்கப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவ விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒவ்வொரு மாணவரும் படிக்கும் வகையில் மாணவர்களின் வீட்டுக்கு நான்கு ,நான்கு புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்லி பேசும்போது ,தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி அதிக அளவில் ஊர்புற நூலகங்களை திறந்துள்ளது.நூலகங்களில் அரியவகை புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன . பள்ளி விடுமுறையில் புத்தகங்களையும்,நூலகங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ள வேண்டும் என்று பேசினார்.புத்தகம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கருப்பையா ,ஸ்ரீதர், முத்து மீனாள்,முத்து லெட்சுமி,செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.மாணவர்களுக்கு புத்தகம் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களில் படித்ததை கேட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.தொடந்து பல ஆண்டுகளாக ஒவ்வொரு பள்ளி விடுமுறையிலும் பயனுள்ள வகையில் மாணவர்களின் வீடுகளுக்கு புத்தகங்கள் வழங்கி படிக்கச் செய்து பரிசுகளும் வழங்குவது மாணவர்களிடம் வசிக்கும் பழக்கத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..