வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் ஷஸ்மிதாவிற்கு பிறந்தநாளில் பாராட்டு சான்றிதழ்.

கடந்த செப்டம்பர் மாதம் 23ம் தேதி பத்து வயதான மாணவி ஷஸ்மிதா தனது தந்தை அசோக்குமார் வழிகாட்டுதலில் விதைப்பந்து தயாரித்து நெடுஞ்சாலை ஓரங்கள் மற்றும் கண்மாய்களில் தூவும் பணியை தொடங்கினார்.அன்று வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் ஷஸ்மிதாவின் கைகளில் விதைப்பந்துகளை வழங்கி இந்த பசுமை பணியை முதல் முதலில் தொடங்கிவைத்து வாழ்த்தினார்.அன்று முதல் விடுமுறை நாட்களில் தனது தந்தை, தம்பி மற்றும் நட்புகளோடு இணைந்து தொடர்ந்து இந்த பசுமை பணியில் ஈடுபட்டு இன்று விதை தூவும் பறவைகளாக உருவெடுத்துள்ளனர்.இந்த நற்பணியை பாராட்டும் வகையில் ஷஸ்மிதாவிற்கு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் சிறந்த பசுமை பணிக்கான பாராட்டு சான்றிதழை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் வழங்கினார்.மேலும் இச்சான்றிதழ் மாணவியின் பிறந்தநாள் பரிசாகவும் அமைந்தது.இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் நீர்நிலைகள் அபுபக்கர், சேக்மஸ்தான், சுதாகர், கார்திக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image