கீழக்கரையில் சிறப்பாக நடைபெற்று வரும் பெண்களுக்கான குறுந்தொழில் கண்காட்சி..

கீழக்கரையில் உள்ள ஹமீதியா மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியில் இஸ்லாமிக் கல்ச்சுரல் டிரஸ்ட், பாதன் ஹெரிடேஜ் லீக் மற்றும் BOO BROS Men’s Wear இணைந்து நடத்தி வரும் பெண்களுக்கான குறுந்தொழில் (குடிசை) சிறப்பு வியாபார கண்காட்சியில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி இன்று (31-12-19) மாலை 5 மணி முதல் நடைபெற்றது.

மேலும் 30/12/2019 அன்று தொடங்கிய கண்காட்சி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 8 மணியிலிருந்து இரவு 10.30 மணி வரை நீடிக்கப்பட்டது. அதுபோல் இன்றும் (31/12/2019) நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலமாக வீடுகளில் தயார் செய்து விற்கப்படும் கீழக்கரையின் பாரம்பரிய திண்பண்டங்களான கடலை உருண்டை, எள்ளு உருண்டை, துதல், கலகலா, பணியம், ஓட்டுமாவு, நிலக்கடலை சூஸ்பரி, சீனிக்கருப்பட்டி, அல்வா கருப்பட்டி, பட்டர் முறுக்கு, சீப்பணியாரம், வெள்ளாராரியம் போன்ற சுவையான இனிப்பு மற்றும் கார வகைகளும், குலாப் ஜாமூன், ரசமலாய், சிக்கன் சவர்மா, சூப், மாங்காய் ஊறுகாய், ஐஸ் கிரீம் வகைகள் என பல உணவு வகைகள் நேரடி விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இடியாப்ப மாவு, புட்டு மாவு, போன்ற மாவு வகைகளும், பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்களுக்கான ஆடை மற்றும் ஆபரண பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

இதுக்குறித்து கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “மாஷாஅல்லாஹ் இந்த மாதிரி எங்களை போன்ற வீடுகளில் இருந்து விற்பனை செய்யக்கூடிய பெண்களை ஒன்றிணைத்து கூட்டமைப்பு செய்து இந்த நிகழ்ச்சியை நடத்தி எங்களுக்கு உறுதுணையாக நடத்தி தருவது மிக பாராட்டுக்குரியது. இதற்காக எந்த வித கட்டணமும் எங்களிடம் வசூலிக்காமல், அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் இலவசமாக வழங்கி ஏற்பாடு செய்து தந்தனர். இதைப்போன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து இந்த கூட்டமைப்போடு இனி வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என கூறினார்.

இது குறித்து வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில் ” இது நல்ல முயற்சி, குறைந்த விலையில நல்ல ருசியான சாமான்கள் வாங்கிட்டு போறோம். எளிமையா ஆடம்பரம் இல்லாம இங்க உள்ளவங்களுக்கு உதவுர வகைல இந்த ஏற்பாடு பன்னிருக்காங்க. இங்க நல்ல தரமான வீட்டில் தயாராகும் பொருட்கள் வந்து வாங்கிட்டு போறோம்.” என கூறினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image