Home செய்திகள் திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தியதாக புகார். தன்னை யாரும் கடத்தவில்லை என தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம்.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரை கடத்தியதாக புகார். தன்னை யாரும் கடத்தவில்லை என தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம்.

by mohan

திருப்பூர் காமராஜர் சாலையைச் சேர்ந்த சிதம்பரம் மகன் கனேசன் (40). இவர் திருப்பூரில் பெரிய தொழிலதிபர். இவர் சிறுவயதிலேயே தாய் தந்தை இறந்துவிட்ட நிலையில் தனது பெரியப்பாவின் வீட்டில் வசித்து வந்தார். இவரது பெரியப்பா சுப்ரமணியம் கனேசன் பெயரில் அதிக சொத்துக்கள் இருப்பதை தெரிந்துகொண்ட இவர் சொத்தை அபகரிப்பதற்காக கனேசனை வெளியுலகத்தை பார்க்கவிடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளர்.இவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சில இளைஞர்கள் எலக்ட்ரீசியன் வேலைக்காக திருப்பூர் சுப்பிரமணியம் வீட்டிற்குச் சென்றவர்கள் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட கனேசனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கனேசன் தனக்கு நடந்த சம்பவத்தை அவர்களிடம் கூறினார். அதனைதொடர்ந்து கனேசனை மீட்ட இளைஞர்கள் கடந்த 1வருடங்களுக்கு உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து அகிலஇந்தியபார்வர்ட் ப்ளாக் கட்சியின் மாநில தணைத்தலைவர் கர்ணனிடம் ஒப்படைத்தனர். அதனைதொடர்ந்து கனேசனுக்கு அடைக்கலம் வழங்கி தனியாக வாடகைக்கு வீடு ஏற்படுத்திகொடுத்து சுதந்திரமாக இருக்க ஏற்பாடுசெய்து கொடுத்தனர்.

இந்த தகவலறிந்த கனேசனின் பெரியப்பா சுப்ரமணியம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அ.இ.பா.பிளாக் மாநில துணை பொதுச்செயலாளர் கர்ணன் கார்த்திகைச்சாமி நாகராஜன் உள்பட ஏழுபேர் கனேசனை கடத்தி வந்துள்ளதாக உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். அதனைதொடர்ந்து அந்த ஏழுபேர் மீது வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வந்தனர்.; விசாரனை நடைபெற்று வரும் நிலையில் கனேசன் தாமாகவே முன்வந்து உசிலம்பட்டி நடுவர் நீதிமன்ற எண் 2ல் நீதிமன்றத்தில் ஆஜராகி என்னை யாரும் கடத்தவில்லை எனவும், சுதந்திரமாக இருக்கவேண்டும் என நினைத்து நானாகவே வந்ததாகவும் என நீதிபதி ராஜேஸ்கண்ணன் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்தார்.

இதனால் இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. மேலும் திருப்பூர் செல்ல விரும்பவில்லையெனவும் சொத்துக்காக என்னை பெரியப்பா சுப்ரமணியம், மற்றும் அவரது சம்பந்தி உட்பட 3பேர் கொலை செய்துவிடுவார்கள் எனக்கூறி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.இதனை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!