தினமும் 10,000கும் மேலான பார்வையாளர்களுடன், வாசகர்களின் ஆதரவோடு நான்காம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் “கீழை நியூஸ்”…

கடந்த ஆண்டு(2016) டிசம்பர் மாதம் 29ம் தேதி கீழை நியூஸ் இணைதள பத்திரிக்கை பொது மக்களுக்கு முறையான இணைய தள பத்திரிக்கையாக அறிமுகப்படுத்ப்பட்டது.  தொடக்கத்தில் “கீழக்கரை செய்திகளின் நுழைவு வாயில் – நிஜங்களின் நிதர்சன நண்பன்” என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டு பின்னர் அனைத்து பகுதி செய்திகளையும் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு உலக செய்திகளின் நுழைவு வாயில் என்று மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டது.

கடந்து வந்த பாதை:-

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உள்ளூர்  செய்திகளை மக்களுக்கு உண்மையான தரத்துடன் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, பின்னர் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் முழுமையான இணைய பத்திரிக்கையாக உருவெடுத்தது.
கீழைநியூஸ் தொடங்கி சில காலங்களில் கீழக்கரை நடப்புகளை வீடியோவாக வாரம் தோறும் தோறும் தர வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்ட கீழை நியஸ் டி.வி இன்று 2500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட யூட்யூப் சேனலாக தொடர்ந்து இன்று வரை கீழக்கரை மற்றும் பிற ஊர் நிகழ்வுகளையும், தனித்தன்மையான நிகழ்ச்சிகளையும் மக்களுக்கு தொடர்ந்து வழங்கி கொணடு வருகிறது.
ஆரம்ப காலத்தில் தினமும் 100 முதல் 200 பேர் பார்க்க கூடிய இணைதளமாக இருந்த www.keelainews.com  இன்று குறைந்தது 10,000 முதல் 12,000 பேர் பார்க்க கூடிய இணைதளமாகவும் 27000 விருப்பங்களை பெற்ற முகநூல் பக்கமாகவும் 5000 வாசகர் வட்டத்தை கொண்ட முகநூல் கணக்கை கொண்டதாகவும் வளர்ந்து விளங்குவதற்கு முக்கிய காரணம் வாசகர்களாகிய உங்களுடைய முக்கிய பங்களிப்பும், தரமான நடுநிலையான செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த அங்கீகாரம் என்றே மகிழ்ச்சி கொள்கிறோம்.
மேலும் எங்களுடைய பணிகள் சிறக்க இன்று வரை ஊக்கம் அளித்து வரும் வாசகர்கள் நண்பர்கள் வியாபார நண்பர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் எங்கள் நிறுவன உறுப்பினர்க்ளுக்கு எங்களுடைய மனதார நன்றியை தெரிவித்துக் கொணடு இந்நிறுவனம் மென் மேலும் மக்கள் பணியில் வளாச்சி அடைய பிரார்த்திக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..