நெல்லையில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி-பள்ளி மாண மாணவிகள்,ஆசிரியர்கள் பங்கேற்பு

நெல்லை மாவட்டம் சங்கர்நகர் சங்கர் மேல் நிலைப் பள்ளி என்சிசி சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.விழிப்புணர்வு பேரணியில் பள்ளி தலைமையாசிரியர் திரு.உகணேசன் தலைமை தாங்கினார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன், தேசிய பசுமைப்படை திட்ட அலுவலர் முனைவர் கவிஞர் கணபதி சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவல் உதவி ஆய்வாளர் திரு. அப்துல் கலாம் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி மூலம் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரணியில் உடற்கல்வி ஆசிரியர் திரு .கோ. சண்முகவேல் பட்டதாரி ஆசிரியர்கள் .திரு. கண்ணையா திரு. ஷேக் அப்துல்லா, திருமதி.லதா, திருமதி முத்துலட்சுமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வும் நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றித் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை என்சிசி பொறுப்பாசிரியர், திரு .ஜெயப்பிரகாஷ் சிறப்பாக செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..