உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம்

மதுரை மாவட்ட கண்கானிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு நீண்ட காலமாக நிலுவையிலுள்ள புகார் மனுக்களை அந்தந்த காவல் நிலைய எல்கைக்கு உள்பட்டபகுதிகளில் சிறப்பு மனுநீதி முகாம் என்ற பெயரில் இரு தரப்பினரையும் அழைத்து உடனடி தீர்வு காணப்படுகிறது.இந்த மனுநீதி முகாம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவண்டன்பட்டி ரோட்டில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் சிறப்பு மனுநீதி முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட சட்ட ஒழுங்கு குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் கனேசன் தலைமையில் தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள், சொத்து பிரச்சனை, பணப்பிரச்சினை குடும்பதகராறு, வாய்க்கால் தகராறு போன்ற பிரச்சனை குறித்து மனுக்கள் அளித்;;தனர். இந்த மனுநீதி முகாமில் மொத்தம் 237 மனுக்கள் பெறப்பட்டு அதில் 143 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டன. உடனடி தீர்வுகாணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் உசிலம்பட்டி காவல்துணைகண்காணிப்பாளர் ராஜா,  ஆய்வாளர் சார்லஸ், அனிதா, மனிமொழி, மற்றும் சார்பு ஆய்வாளர் வேல்முருகன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..