நிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 82 பேர் வேட்பு மனுதாக்கல்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 20 பேர்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 23 பேர்களுக்கும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 217 பேர்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.       கடந்த 9 தேதி முதல் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், வார்டு வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6  நாட்களில் 558  வேட்புமனுக்கள் வந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:

      நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவதற்காக வெறும் 82 மனுக்கள்  பெறப்பட்டுள்ளது. அதேபோன்று 217வார்டு உறுப்பினர் பதவிக்கு 444 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் 20 பேர்களுக்கு   தி.மு.க., அ.ம.மு.க. உள்பட  57 பேர்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள்.      திமுக கட்சியை சேர்ந்த மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு ராஜ்குமார் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திமுகவைச் சேர்ந்த கோட்டைச்சாமி எத்திலேரடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், திமுகவைச் சேர்ந்த ஆனா பட்டியைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் சித்தர்கள் நத்தம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், குல்லலக் குண்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தெய்வராஜ் மனைவி யசோதை, அதே ஊராட்சிக்கு பெரியசாமி மனைவி சிவரஞ்சனியும் , கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக புரட்சி மணி மனைவி மாலினி என்பவரும் உள்பட பலர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார்கள்.வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே நாள் இருக்கிற நாளில் இதுவரை அதிமுகவினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத காரணத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..