குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை-குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறுகிறதா மத்திய அரசு ?

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் சில மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் முஸ்லிம்களை குறி வைத்து முஸ்லிம்களை தவிர அனைத்து மதத்தினருக்கும் குடியுரிமை வழங்கும் வகையில் புதிய குடியுரிமை சட்டம் அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் போர்க்களமாகியுள்ளன. டெல்லியிலும் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு பாஜகவே காரணம் என்று குற்றம் சாட்டி வருகின்றன.

மேலும் இச்சட்டம் உலக நாடுகளின் எதிர்ப்புக்கும் வழி வகுத்துள்ளது.இந்நிலையில் ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அமித்ஷா, “காங்கிரஸின் குற்றச்சாட்டுகளை மறுத்த அதேவேளை, புதிய குடியுரிமை சட்டம் குறித்து ஆலோசித்து சில மாற்றங்கள் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக அஸ்ஸாம் முதல்வர் பிரதமர் மோடி மற்றும் அமித்சா உள்ளிட்டவர்களை சந்தித்து அஸ்ஸாமின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.குடியுரிமை திருத்த சட்டம் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து,மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இச்சட்டம் திரும்பப்பெறும் நிலை உருவாகலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..