பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் உள்ள ராகவனார் திருமண மண்டபத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்      மதுரை மாநகர காவல் துணை ஆணையர் குற்றம்  பழனிக்குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் தமிழ்நாடு காவல்துறையால் புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS செயலியின் பயன்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தும் மற்றும் WHATSAPP FACEBOOK TWITTER INSTAGRAM போன்றவற்றினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்தும் மற்றும் POCSO ACT, CHILD ABUSE, EVE TEASING பற்றியும் சமூக ஊடக பிரிவு காவல் உதவி ஆய்வாளர் திருமதி. ஷர்மிளா அவர்கள் விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர நகர் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் .ரமேஷ், மதுரை மாநகர் நகர் சட்டம் & ஒழுங்கு உதவி ஆணையர் .சூரக்குமாரன், B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய (குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளர் .முருகன் மற்றும் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலைய (ச & ஒ) காவல் ஆய்வாளர் . பாலமுருகன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் 200 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..