புத்தனாம்பட்டி, நேரு நினைவுகல்லூரியில் மாநில அளவிலானஇரண்டுநாள் அறிவியல் கண்காட்சி

புத்தனாம்பட்டி, நேரு நினைவுகல்லூரியில் முதுநிலை அறிவியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி துறைசார்பாக மாநில அளவிலானஇரண்டுநாள் அறிவியல் கண்காட்சியை இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறையின்விஞ்ஞானியும்,அறிவியல் தமிழ் எழுத்தாளருமான நெல்லை.சு.முத்து கண்காட்சியை தொடக்கயுரையாற்றிதொடக்கிவைத்தார்.இவ்வுரையில்,திருகுறளில் உள்ள அறிவியல் நுட்பங்களை எடுத்துக்கூறினார்.மேலும்அறிவியல் புனிதமானது,தொழிட்நுபம் தூய்மையானது என்றும்,எந்தவொரு புதிய தொழில்நுட்பமும்வரவேற்கப்படவேண்டியவை எனவும்,நமது தேசம் வல்லரசாக விழாவில் பங்கேற்ற அனைவரையும்,கலாமின் ஐந்துகட்டளைகள் சொல்லி உறுதிமொழி ஏற்கவைத்தார். மதியம் நடைபெற்ற இரண்டாவது அமர்வில்கடந்த 30ஆண்டுகால இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வளர்ச்சியையும், சாதனையையும்பட்டியலிட்டு மாணவர்களிடையே கலந்துரையாடி மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குவிளக்கமாகவும்,தெளிவாகவும் பதில் அளித்தார்.

மூன்றாவது அமர்வில்,மிககுறைந்தவயதில் NASA மற்றும் ISRO மூலமாக தொடர்ந்து மிகச்சிறியளவிலான 3-D செயற்கைகோள்களைசெலுத்திவரும் space kids India அமைப்பின் தொழில்நுட்ப வல்லுநர் ” யாக்னா சாய்”செயற்கைகோள் உருவாக்க தொழில்நுட்பத்தினை விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர்.A.R.பொன்பெரியசாமிவரவேற்புரையும்,கல்லூரிகுழுத்தலைவர்.பொறியாளர்.பொன்.பாலசுப்ரமணியன் மற்றும் கல்லூரி செயலர்பொன்.இரவிச்சந்திரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மீனாட்சிசுந்தரம் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர்.பேராசிரியர்.K.நாகராஜன்,இயற்பியல் துறைத்தலைவர் நன்றியுரை வழங்கினார்.கண்காட்சிக்கானஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கபிலன் மற்றும் இரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.முதுநிலை அறிவியல் இயற்பியல்ஆராய்ச்சி துறை சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் அறிவியல் கண்காட்சியில் இரண்டாம்நாளில் 150அறிவியல் மாதிரிகள் காட்சிபடுத்தப்பட்டன. இந்த மாதிரிகளை ஐந்து நபர் கொண்ட நடுவர் குழுஆய்வு செய்து சிறந்த மாதிரிகளை தேர்வுசெய்தனர். சிறந்த அறிவியல்படைப்பாக. ஆழ்துளை கிணற்றில் சிக்குபவர்களை மீட்கும் தொழில்நுட்ப மாதிரியைகாட்சிப்படுத்தி விளக்கிய ஒன்பதாம் வகுப்பு சேலம், கண்ணன் குறிச்சி அரசு பள்ளி மாணவனுக்குமுதல் பரிசாக ரூபாய்.5000 மற்றும் பரிசுகேடயமும் கல்லூரிக்குழு தலைவரால் வழங்கப்பட்டது. மீதம்இரண்டு மாதிரிகளுக்கும் முதல் பரிசு தலா 5000/- மற்றும் கேடயம், மூன்று இரண்டாம்பரிசாக தலா 3000/- , மற்றும் கேடயம், மூன்று மூன்றாம் பரிசாக தலா 2000/-மற்றும் கேடயம் ஆகியன நமது கல்லூரிதலைவர்,செயலர்மற்றும் சிறப்பு விருந்தினர்களால் மாணவர் குழுக்களுக்கு வழங்கப்பட்டது.இந்த இரண்டுநாட்கள் நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 3000 பார்வையாளர்கள்கண்டுகளித்தனர். தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களைச்சேர்ந்த பள்ளி,கல்லூரி மற்றும்பல்கலைகழக மாணவர்கள் தங்கள் அறிவியல் மாதிரிகளை காட்சிபடுத்தி பார்வையாளர்களுக்குவிளக்கினர்.கண்காட்சியில் பங்கேற்ற பிற பள்ளி ஆசிரியர்கள், மற்றும்மாணவர்கள் சிறந்தமுறையில் கண்காட்சியை ஏற்பாடு செய்த கல்லூரிநிர்வாகத்திற்குநன்றியையும், தங்களின் சிறந்த இரண்டுநாள் அனுபவங்களையும் பின்னூட்டம் (feedback) வழுங்கும்நிகழ்வில் பகிர்ந்து கொண்டனர். நிறைவுநாள்விழாவை கல்லூரி முதல்வர் பொன்பெரியசாமி வரவேற்புரையாற்றிதொடங்கிவைத்தார்.நிறைவுநாள் உரையை தன்ராஜ் ISRO வழங்கினார். கல்லூரிதலைவர் பொன்.பாலசுப்ரமணியன் மற்றும்கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.விழாவில்நன்றியுரை உதவிபேராசிரியர் கபிலன் வழங்கினார்.விழாவிற்கான ஏற்பாடுகளைஉதவிபேராசிரியர் இரமேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..