இந்திய அரசியமைப்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இந்திய அரசியல் அமைப்பின் குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ராமநாதபுரம் சந்தை திடலில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் முகமது அயூப் கான் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா உரை நிகழ்த்தினார். தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றி இருப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது ஆகும். மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்த கூடாது என அரசியல் சாசனத்தில் உள்ளது . இந்த சட்டத்திருத்த மூலம் நாட்டிற்கு எவ்வித நன்மையும் ஏற்படப்போவதில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்தோருக்கு குடியுரிமை வழங்குவது மசோதாவின் நோக்கம் என மத்திய அரசு சொல்கிறது. அதில் முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டு இருப்பது எந்தவகையில் நியாயம். முஸ்லிம்களின் உரிமைகளை பறிக்கும் மத்திய அரசின் போக்கு நாட்டை, மத ரீதியில் பிளவு படுத்துவதாகும்.

பொருளாதார வீழ்ச்சியில் இந்தியா சிக்கி தவிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற வரிகளால் வணிக நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. வறட்சியால் விவசாயிகள் தற்கொலை அவலம் அதிகரித்து வருகிறது. இது போன்ற பிரச்னைகளில் இந்திய மக்களை பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு சிறிதும் கவலை இல்லாமல் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் ஏற்றுவதன் மூலம் ஏழை மக்களின் பிரச்னைகள் தீர்ந்து விடப்போவதில்லை. நாட்டின் வளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து அதன் மூலம் விலைவாசி உயர்வை கட்டுக்குள் இல்லை. அரசு நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் மத்திய அரசின் தற்போதைய சாதனையாக உள்ளது. ஹிட்லரின் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் நன்றி கூறினார். இதில் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..