ராமநாதபுரம் அருகே குடியிருப்பு பகுதிகளில் குவியும் மருத்துவக் கழிவுகள்: தொற்று நோய் பரவும் அபாயம்

இராமநாதபுரம் பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகர் 7வது தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அப்பகுதியில் மருத்துவக் கழிவுகள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருவதால் தொற்று நோய் பரவும் அபாயத்தால் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது அப்பகுதியில் தேங்கிய மழை நீருடன் மருத்துவக் கழிவு கலந்து துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: சுகாதாரத்துறை, ஊராட்சி நிர்வாகம், வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மிகுந்த வேதனையுடன் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்லும் நிலை உள்ளது. மருத்துவக் கழிவுகளை மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..