ராமநாதபுரம் பத்திரிகையாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா

சென்னையைச் சேர்ந்தவர் டி.ஜே.வால்டர் ஸ்காட். முதுகலை பட்டதாரியான இவர், ஜனநாயகத்தின் நான்காம் தூண் பத்திரிகை துறையில் கடந்த 1986ல் பத்திரிகை துறையில் தமிழ் முன்னணி நாளிதழ் ஒன்றில் கால் பதித்தார். அவரது அசாத்திய திறமைக்கு தி இந்து ஆங்கில நாளிதழ் கதவு திறந்து. அங்கு பணியை தொடர்ந்த ஸ்காட், சட்ட சபை விவாதங்கள் உள்ளிட்ட செய்திகளை மறுநாள் தி இந்து நாளிதழ் வாசிக்கும் வாசகர்களுக்கு சட்டசபை பார்வையாளர்கள் அரங்கில் அமர்ந்து பார்த்து போன்ற உணர்வை பிரபதி பலித்தார். பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பான கட்டுரைகளை வெளியிட்டு வாசகர்களின் நெஞ்சங்களில் நிறைந்தார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து நிருபர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து விட்டு காரில் ஏற முயன்ற போது மறைந்த முதல்வர் ஜெயலலலிதாவிடம்’மேடம் ஒன் மினிட்’ என திரும்ப வைத்தார்.

இந்திய பிரதமர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், வெளி நாட்டு அதிபர்கள், தூதுவர்களின் சென்னை வருகை தொடர்பான செய்தி சேகரிப்பு பணி ஆற்றிய ஸ்காட் என எல்லோராலும் அழைக்கப்பட்ட அந்த மூன்றெழுத்து சொல்லின் எழுத்துப்பணி 2012 அக்டோபரில் ராமநாதபுரத்தில் அடி எடுத்து வைத்தது. அரசு உயரதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் என இவர்களால் மட்டுமே ஆங்கில நாளிதழ் சாத்தியம் என்றிருந்த மனப்பாங்கை ஆங்கிலம் கடினம் அல்ல. எளிமை எல்லோராலும் படிக்க இயலும் என்பதை, எளிய வார்த்தைகளால் அனைவரிடமும் கொண்டு சேர்த்தார். கிராமப் புற மாணவர்களின் சாதனைகளை தமிழ் பத்திரிகைகளில் மட்டும் சாத்தியம் என்ற கட்டமைப்பை முற்றிலும் தகர்த்தெறிந்து ஆங்கில நாளிதழ்களிலும் வாசிக்க வைத்தார். ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளின் பிரச்னைகளுக்கு தன் சமூக சிந்தனை கட்டுரைகளை வெளியிட்டு தீர்வு கண்டார்.

அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. . ஏற்றுக்கொண்ட பதவிக்கெல்லாம் பெருமையை தந்தார் என புகழப்படும் பேரறிஞர் பெருந்தகையின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தராக மந்திரத்திற்கு நூறு சதவீதம் பொருத்தமானவர் ஸ்காட். அனைவரிடத்திலும் ஏற்றத்தாழ்வின்றி பழகுவதில் இனிமை, பலருக்கு சிறந்த ஆலோசகராக இருந்த ஸ்காட் பத்திரிகை பணியில் இருந்து டிச.4ல் ஓய்வு பெற்றார். ராமநாதபுரம் செய்தியாளர் சங்க கவுரவத் தலைவராக இருந்த டி.ஜே.வால்டர் ஸ்காட்டிற்கு பணி நிறைவு பாராட்டு விழா, பிரிவுபசார விழா அரியமான் ஜோஸ் ஷாக்ஸ் கார்டனில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் , சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பாராட்டினார்.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, டாக்டர்கள் சின்னதுரை அப்துல்லா, ஜோசப் ராஜன், ரமணீஸ்வரி,உதவி கோட்ட பொறியாளர் ஜெயதுரை, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எஸ்.எஸ்.ஷேக் அப்துல்லா,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ம. கயிலைச் செல்வம்,முதன்மை விஞ்ஞானி ஜெயக்குமார், பாஜக., மாவட்ட தலைவர் கே.முரளிதரன், வழக்கறிஞர் எம்.சோமசுந்தரம், செய்தியாளர் சங்கத் தலைவர் கி.தனபாலன், செயலர் கே.கே.குமார் , இணை செயலர்கள் எம்.ரகு, ஜி.இளங்கோவன், துணைத்தலைவர் ஜி.பரமேஸ்வரன், பொருளாளர் பி.மகேஸ்வரன், மூத்த பத்திரிகையாளர்கள் ஏ.ஆர்.சந்திரன் (ராமேஸ்வரம்) எஸ்.வி.எஸ்.ஜெகஜோதி, எஸ்.ஜே.தாஹீர் உசேன், ஆர்.ரமேஷ், சண்.ரமேஷ்பாபு, ராமேஸ்வரம் தீவு செய்தியாளர் தலைவர் அ.அசோகன், செயலர் ஆர்.மோகன், பொருளாளர் ஜோதி ராமலிங்கம், செய்தியாளர்கள் கரு. கயிலை நாதன், ரபீக் ராஜா, முருகேசன் (மண்டபம்) சோமசுந்தரம், ராமநாதன், நிரபராதி மீனவர்கள் மீட்பு கூட்டமைப்பு நிர்வாகி அருளானந்தம், பட்டணம்காத்தான் ஊராட்சி வார்டு முன்னாள் உறுப்பினர் முருகன், பசுமை காவலர் சுபாஷ் சீனிவாசன் உள்பட பலர் பாராட்டி பேசினர். டி.ஜே.வால்டர் ஸ்காட் ஏற்புரை பேசினார். செய்தியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..