Home செய்திகள் நிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 30 மேற்பட்டவர்கள் வேட்பு மனுதாக்கல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 பேர் மனுத்தாக்கல்

நிலக்கோட்டையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு 30 மேற்பட்டவர்கள் வேட்பு மனுதாக்கல் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 20 பேர் மனுத்தாக்கல்

by mohan

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வருகின்ற 27ஆம் தேதி தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை  நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 2 பேர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு 20 பேர்களும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 23 பேர்களுக்கும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 218 பேர்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.        கடந்த 8 தேதி முதல் தமிழக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி அலுவலகத்திலும் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 5. நாட்களாகியும் மிக குறுகிய அளவிலேயே வேட்புமனுக்கள் வந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:      இதுவரை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடுவதற்காக வெறும் 17 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அதேபோன்று  218-வார்டு உறுப்பினர் பதவிக்கு 90 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அமமுக கட்சி சார்பாக 23 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கும் ஒரு நபர் வீதம் 23 பேர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள். அதுபோக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மேலும் 2 பேர் கட்சி சாராத நபர்கள் வேட்புமனு  தாக்கல் செய்து உள்ளார்கள்.

    அந்தவகையில் நேற்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சித்தர்கள் நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி பிரமுகரான முத்தையா தனது மனைவி முத்துலட்சுமி பெயரில் வேட்புமனுதாக்கல் செய்துள்ளார். அதேபோன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் தோப்பு பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பாண்டி  கோடாங்கிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

வீலிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவருக்கு முருகன் மனைவி வீருசின்னு நேற்று படைசூழ 500-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். நூத்து லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரும், திமுகவைச் சேர்ந்த  கோபால் என்பவரும். தேமுதிகவை சேர்ந்த சீனிவாசன் என்பவரும், ஏற்கனவே ராமு என்பவரும் வேட்புமனு மனுதாக்கல் செய்து உள்ளார்கள். சிலுக்குவார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஜெயசீலன் மனைவி செல்வி என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழரசன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் இதுவரை இன்னும் அ.தி.மு.க.வுக்கும்  தே.மு.தி,க.வுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை கூட்டணி உடன்பாடு ஏற்படாத நிலையில் பழைய வத்தலக்குண்டு சேர்ந்த தே.மு.தி.க .மாநில பொதுக்குழு உறுப்பினர் மாசாணம் மனைவி பழனியம்மாள் மாவட்ட கவுன்சிலர் 23வது வார்டு பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது அ,தி.மு.க.வினருக்கும், தே.மு.தி.க.விற்கு மிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!