Home செய்திகள் நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்

நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்

by mohan

தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நோபல் பரிசு குழுவின் உறுப்பினர் பலாஸ் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ . சொக்கலிங்கம் வரவேற்றார். சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழக இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் முன்னிலை வகித்தார் . நோபல் பரிசுக் குழுவின் உறுப்பினரும், சிங்கப்பூர் நான்யாங் பல்கலைக்கழகத்தின் இயக்குனருமான பலாஸ் தலைமை தாங்கி மாணவர்களுடன் பேசுகையில் , மாணவர்களே எனக்கு 63 வயது ஆகிறது. 55 வருடத்திற்கு முன்னால் ஐரோப்பாவில் பிறந்து வளர்ந்த ஞாபகங்கள், சிறு கிராமத்தில் பள்ளியில் படித்த நினைவுகள் உங்களை சந்திக்கும் போது எனது நினைவுக்கு வருகிறது. ஹங்கேரி நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து ஆசிரியர்களின் சொல்படி படிப்பின் அவசியத்தை உணர்ந்து நான் படித்ததால், பல ஆயிரம் மைல் தொலைவு கடந்து பயணம் செய்து வந்து உங்கள் முன் இப்போது பேசும்போது அதனை மனப்பூர்வமாக உணர்கிறேன். ஒவ்வொருவரும் பள்ளிக்கு செல்லுதல்,படித்தல் போன்றவற்றை வாழ்க்கை முழுவதும் தொடருங்கள் .ஆசிரியர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் நல்ல நிலைக்கு உயர முடியும் என்பதற்கு நானே ஒரு உதாரணம் ஆவேன் .உங்களை சுற்றி உள்ளவர்களையும் , உறவினர்களையும் ,அப்பா ,அம்மா ,தாத்தா, பாட்டி ஆகியோரையும் மதித்து அவர்கள் சொல்படி நடந்தால் வாழ்க்கையில் உயரத்தை தொடலாம் .அது மிகவும் முக்கியம். பணிவு இருந்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை எளிதாக அடையலாம் .பல்வேறு நாடுகளுக்கும் செல்வதற்கு எனக்கு கல்வி மட்டுமே பயன்படுகிறது. கல்வியே உங்கள் சொத்தாகும் என்று மாணவர்களிடம் தன்னம்பிக்கை தரும் விதத்தில் ஆங்கிலத்தில் பேசினார் . சிங்கப்பூர் பல்கலைக்கழக இணை இயக்குனர் பரசுராமன் பத்மநாபன் தமிழில் மொழி பெயர்த்தார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .நிறைவாக ஆசிரியை முத்துலட்சுமி நன்றி கூறினார் . நோபல் பரிசு குழு உறுப்பினர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது .

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!