நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாததால் நோயாளிகள் அவதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அரசு மருத்துவமனை கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மருத்துவமனையில் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்கிறார்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர் சரியான நேரத்திற்கு வருவதில்லை என கூறப்படுகிறது. அதுவும் நேற்று 11.12.2019 மாலை ஆறு மணியிலிருந்து இரவு 9 மணிவரை டாக்டர் யாரும் இல்லாததால் நிலக்கோட்டை அருகே தீயணைப்பு நிலையம் முன்பு தற்போது சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் கற்களால் இருந்ததன் காரணமாக நூத்துலபுரத்தைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் சுகுமாறன் 19 சாலையில் விழுந்து மிகப்பெரிய காயத்துடன் அரசு மருத்துவமனை அணுகியபோது 7 மணியிலிருந்து 9 மணிவரை டாக்டர் இல்லை. இதனால் காயத்திற்கு மருந்து போடுவதற்கு கூட டாக்டர் அனுமதி இல்லாமல் அங்கிருந்த பணியாளர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள். அதுமட்டுமல்ல நோயாளி மிகுந்த அளவில் அவதிப்பட்டார்.அதே போன்ற 10க்கும் மேற்பட்ட காய்ச்சல் மற்றும் தலைவலி வயிற்று வலி உள்ளிட்ட நோய்களுக்கு நோயாளிகளை யாரையும் அனுமதிக்காமல் அப்படியே அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் முருகன் பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி தனலட்சுமி 40 பாம்பு கடித்து வந்தபோது டாக்டர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து செவிலியருக்கு மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வைத்து உடனடியாக தனலட்சுமிக்கு முதல் சிகிச்சை முதலுதவி அளிக்கப்பட்டது . இது போன்ற பெரிய அளவில் விபத்து ஏற்பட்டால் டாக்டர் இல்லை என்று தெரிந்தால் பொதுமக்கள் பல்வேறு வகையில் போராட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..