Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரையில்…தொழில், வர்த்தக கண்காட்சி…. தொழில் முனைவோருக்கான அரிய வாய்ப்பு….

கீழக்கரையில்…தொழில், வர்த்தக கண்காட்சி…. தொழில் முனைவோருக்கான அரிய வாய்ப்பு….

by ஆசிரியர்

ஹமீதிய தொடக்கப்பள்ளியின் 150 ஆவது ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பை முன்னிட்டு பல்வேறு புதுமைகளுடன் தொழில் வர்த்தக மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி, கீழக்கரை மேலத்தெரு ஹமீதியா தொடக்கப்பள்ளி வளாகத்தில் வரும் டிசம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

கீழக்கரை சமூகத்தில் புதிய தொழில் முனைவோர்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கண்காட்சி குறித்து இதன் ஏற்பாட்டாளர் சதக் இஸ்மாயில் கூறியதாவது,

“கீழக்கரை பகுதியில் தற்போது நிலவும் பொருளாதார மந்த சூழல் மற்றும் வேலையின்மை தலைவிரித்தாடும் இன்றய காலத்தில் புதிய தொழில்களை தொடங்கவும், தொழில் முனைவோர்களை உருவாக்கி, ஊக்குவிக்கவும், புதுமையான பொருட்கள் மற்றும் சேவைகளை சந்தை படுத்தி பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை வலியுறுத்தும் நோக்கில் “கீழக்கரையின் நெடுங்கால வர்த்தக நற்பெயரை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனும் முழக்கத்துடன் இந்த ஆண்டு முதல் தொடர்ந்து தொழில் வர்த்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது” என் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியில் 3 பெவிலியன்களுடன் 70க்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தியா மற்றும் வெளி நாட்டு பிரபல தொழில் மற்றும் சேவை நிறுவனங்களும் பங்கெடுக்க இருக்கிறது. மேலும சிறுதொழில், கடல்சார் மற்றும் பனை, தென்னைசார் தொழில்கள், கீழக்கரை பாரம்பரிய உணவு பொருட்கள் அடிப்படையிலான தொழில்கள் செய்வோரை ஊக்குவிக்கும் அடிப்படையில் அதற்கான அரங்குகளும் அமைகின்றன.

இந்த கண்காட்சியின் போது, இளம் தொழில் முனைவோரும், வணிகர்களும், மகளிரும் தொழில் வணிகத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளன. இந்த கண்காட்சி உள்பட நடைபெறவிருக்கும் பட்டிமன்றம், இலவச மருத்துவ முகாம், சொற்பொழிவு போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் கீழக்கரை சமூகம் கலந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பாகும்.

Source;- Mahmood Naina, FB post

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!