அமீரகத்தில் உணவு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட சமூக வலைதள பதிவுகளில் கவனம் தேவை… சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாகலாம்..

சமீப காலமாக சமூக வலைதளங்களில் உணவு, ஆரோக்கியம், உடற்பயிற்சி போன்ற பல வகையைான பதிவுகளை காண முடிகிறது. ஆனால் அவை அனைத்தும் அத்துறையைச் சாந்தவர்களால்தான் பதியப்படுகிறதா?? இல்லையா என்பதை பல தருணங்களில் முழுமையாக ஆய்வு செய்யாமல் உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

சமிபத்தில் ஒரு பெண்மணி அமீரகத்தில் முகத்தை மெருகேற்றுவதற்காக சமூக வலைதளங்களில் பதியப்பட்ட ஒரு பதிவை பார்தது பல் வகையான முகப்பூச்சுகளை பூசியதில் முகமே கருகும் நிலைக்கு சென்றுள்ளது. இது போன்ற சம்பவங்களை கருத்தில் கொண்டும், பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் அமீரகத்தில் இது போன்ற தனி நபர் மற்றும் துறை சாராதவர்கள் பதியப்படும் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமீரக சுகாதாரத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட பதிவுகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள 800 11111 என்ற எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News Dt.10/12/2019

புனித ரமலான் வாழ்த்துக்கள்..