வெங்காய விற்பனையை தவிர்க்கும் வியாபாரிகள்.வாங்கப் பயப்படும் பொதுமக்கள்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.சந்தையில் வியாபாரிகள் மூடை(50 கிலோ) சின்னவெங்காயத்தை ரூ8500கும் பெரியவெங்காயம் ரூ 10000க்கும் கொள்முதல் செய்கின்றனர்.இதனை சந்தையில் சின்னவெங்காயம் கிலோ ரூ160 பெரியவெங்காயம் ரூ200க்கும் விற்பனை செய்தாலும் பொதுமக்கள் வாங்கத்தயங்குகின்றனர்.இதனால் ஒரு சில வியாபாரிகளைத்தவிர சிறு வியாபாரிகள் விற்பனையைத் தவிர்த்து வருகின்றனர்.மேலும் கார்த்திகை மாதம் என்பதால் வெங்காயம் இல்லாமல் சமைக்க பெண்களும் தயங்குகின்றனர்.ஆனால் விலையைப் பார்க்கும் பொழுது வாங்குவதற்கு யோசனை செய்கின்றனர்.இதனால் வெங்காயம் வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் கேள்விக் குறியாகத்தான் உள்ளது.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..