இராமநாதபுரத்தில் TNPSC தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம்…

அரசு துறையில் வேலை கிடைப்பது என்பது ம்க வும் கடினமான விசயம், அதே சமயம் அதுவே பல பேருக்கு கனவாகவும் இருக்கும்.  ஆனால் அந்த கனவை நினைவாக்க முறையான பயிற்சி என்பது மிக அவசியம்.  இன்றைய காலகட்டத்தில் அனைத்தும் வணிக மயக்கப்பட்டுவிட்ட சூழலில் கல்வியும் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு எட்டா கனியாகவே உள்ளது.

ஆனால் அக்குறையை தீர்த்து ஆர்வம் உள்ள அனைவரும் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் இராமநாதபுரத்தில் MUGAVAI EDUCATION & EMPOWEREMENT TRUST (MEET) சார்பாக 14/12/2019 முதல் காலை 9.00 முதல் 12.00 வரையும், மாலை 2.00 முதல் 4.50 வரை இலவச பயிற்சி முகாம் 8 மாதங்கள் நடத்தப்பட்ட உள்ளது.

இம்முகாம் இராமநாதபுரம் சின்னக்கடை பள்ளிவாசல் தெருவில் உள்ள CRESCENT MATRICULATION HIGHER SECONDARY SCHOOL வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாம் சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு 9003399472, 9500782122, 9087789367 ஆகிய அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image