சத்திரக்குடி அருகே அரசு வாகனம் பசு மீது மோதி டிரைவர் காயம்

இராமநாதபுரம் மாவட்டம் சத்திக்குடி அருகே செவ்வூரில் கர்ப்பிணிகளுக்கான கர்ப்ப கால விழிப்புணர்வு முகாம் இன்று காலை தொடங்கியது. இதில் கலந்து கொள்ளும் போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் 4 பேரை ஏற்றிக்கொண்டு சுகாதார துறை வாகனம் சென்றது. அவர்களை இறக்கிவிட்டு திரும்பிய வாகனம் சின்ன நாகாச்சி அருகே வந்தபோது சின்ன நாகாச்சி செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு சாலையை கடக்க முயன்றது. அப்போது பிரேக் பிடித்தபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பசு மாடு மீது மோதி,மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பசு மாட்டின் பின்னங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய டிரைவர் சாத்தையாவை பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..