கைப்பேசி வழிப்பறி மற்றும் செயின் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்களை 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படையினருக்கு காவல் ஆணையர் பாராட்டு

மதுரை நகரில் விளக்குத்தூண் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் 4 சவரன் தங்க நகையை வழிப்பறி செய்தும், தெப்பக்குளம், தெற்குவாசல், திலகர் திடல், கரிமேடு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் 5 செல்போன்களை வழிப்பறி செய்த நபர்களை விரைந்து பிடிக்க மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் உத்தரவிட்டார். காவல் துணை ஆணையர் குற்றம் பழனிகுமார் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் நகர் குற்ற சரகம் ரமேஷ் நேரடி கண்காணிப்பில் பி3 தெப்பகுளம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கீதாதேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்த நிலையில் B3 தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் இவ்வழக்கை விசாரணை மேற்கொண்டதில் 8.12.2019-ந் தேதி தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடைபெற்ற செல்போன் வழிப்பறி சம்பவத்தை CCTV பதிவுகளை பார்வையிட்டதில் எதிரிகள் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை பற்றியும் தெளிவான துப்புகிடைத்தது. இன்று 09.12.2019 ஓபுளாபடித்துரை சோதனைச் சாவடி அருகே வாகனச் சோதனை மேற்கொண்டிருந்தபோது, CCTV பதிவில் உள்ள வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் போலீஸ் பார்ட்டியை கண்டதும் ஓட முயற்சித்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில்ஜெல் என்ற சல்மான்கான்,அப்துல்ரகுமான்  முகம்மது அன்சாரி,  என தெரியவந்தது.மேலும் மேற்படி மூவரும் மதுரை மாநகரில் ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு செல்போன் வழிப்பறி வழக்குகளும் இரண்டு இருசக்கர வாகன திருட்டு வழக்குகளிலும் மற்றும் கடந்த மாதம் திலகர்திடல் காவல் நிலையத்தில் ஒரு நகை பறிப்பு முயற்சி வழக்கிலும் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனமும், 5 செல்போன்களும், 4 சவரன் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image