புகார் மேளா. பொது மக்களுக்கு குறைதீர்க்கும் முகாம்.

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு உடனடியாக தீர்வு காணும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் பொதுமக்கள் நடப்பு 2019 ஆம் ஆண்டு அளித்த புகார்களுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டி, மதுரை மாவட்டத்தில் 6 நாட்கள் இந்த முகாம் நடைபெற உள்ளது. இதன்படி முதல் முறையாக, திருமங்கலம் மற்றும் பேரையூர் உட்கோட்டத்தில் உள்ள பொதுமக்கள் (புகார் மேளாவில்) கலந்துகொண்டு, கொடுத்த புகார் மனுவிற்கு, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின், மேற்பார்வையில் உடனடியாக தீர்வு காணப்பட்டது.இதில்  ஏ.டி.எஸ்பி கணேசன், டி.எஸ்.பி . விநோதினி, ஆய்வாளர்கள் .ராஜாமணி .சிவசக்தி விஜயகுமார் மற்றும் திருமங்கலம் உட்கோட்ட போலீசார் கலந்து கொண்டு, வரப்பெற்ற புகார் மனுக்களுக்கு உடனடியாக விசாரணை நடைபெற்றது. திருமங்கலம் புகார் மேளாவில் உடனடி தீர்வு கிடைத்தது தொடர்ந்து, மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும், காவல் துறையினருக்கும் தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..