மதுரை மாநகர் பகுதியில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் கொசுத்தொல்லை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி உள்ளது. மழை பெய்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. எனினும் மழை நீர் வடிந்தாக தெரியவில்லை. அந்த மழைநீரில் டெங்கு கொசு மற்றும் மிகப்பெரிய கொசு இரவு நேரங்களில் வீடுகளில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடிக்கிறது .அது ஈ போன்றுபொிதாக  உள்ளது. கடிக்கும் பொழுது மிகப்பெரிய வலிகளும் ஏற்படுகிறது. .குழந்தைகளை கடிக்கும் பொழுது வலி தாங்காமல் அழும் போது கண்ணீர் வருகிறது .இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மழை நீரை அகற்றி கொசு மருந்துகளை அடிக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..