உலக மண் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உலக மண் தினத்தை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மாபெரும் மரக்கன்றுகள் நடும் விழா  நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் சந்தைப்பேட்டை திடலில் மரக்கன்றுகள் நடும் பணிகளை இராமநாதபுரம் மாவட்டம் மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தொடங்கி வைத்தார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.இராஜசிங்கமங்கலம் முன்னாள் மாணவர்கள் சங்க செயலாளர் பகுர்தீன், இராஜசிங்கமங்கலம் இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்பாஸ்,செய்யது மீரான்,ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்வில் நண்பா ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் சதாம், அர்சத் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறுகையில், மண் என்பது உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு முக்கிய அம்சமாக திகழ்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த மண்ணின் வளத்தை சமீப காலமாக அழித்துக் கொண்டு வருகிறோம். விவசாயத்தில் பயண்படுத்தும் ரசாயண உரங்கள் மண்ணிலுள்ள வளங்களை பாதிக்கிறது. மேலும் பாலித்தீன் கழிவுகள் மழைநீரை மண்ணுக்குள் இரங்கவிடாமல் தடுக்கிறது. ஆகையால் மண்வளம் பெரிதும் பாதிக்கிறது. நமது தலைமுறைகள் நெகிழிகளை முழுவதும் தவிர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைத்தார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..