நெல்லை மாநகரில் ஆங்காங்கே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் கால்நடைகள்-கண்டு கொள்ளப்படாத அவலம்

நெல்லை மாநகரில் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் சாலைகளில் கால்நடைகளால், மனித உயிர்களுக்கு உயிரிழப்பு நேரிடுகின்றது என்ற தொடர் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் நெல்லை நீதிமன்ற சட்டபணிகள் ஆணைகுழு,மாநகராட்சி நிர்வாகம்,நெல்லை மாநகர காவல்துறை சார்பாக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளின் உரிமையாளர்கள் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.இருப்பினும் இத்தனை நடவடிக்கைக்கு பிறகும் கால்நடைகளின் உரிமையாளர்கள் இந்த விபத்தினை தடுக்க சிறிதளவு கூட முயற்சி எடுக்காமல் மறுத்து வருகின்றனர்.

கால் நடைகளை கடவுளாக பார்ப்பது இந்த நாட்டில்தான். ஆனால் இந்த நிலை மாறி இன்று பால் விற்பனைக்காக மட்டும் யன்படுத்தி வருகின்ற சுழலையும் பார்க்க முடிகின்றது.மேலும் ஜூவ காரூண்யம் பேசும் வெற்று அரசியல் முழக்கங்கள் எல்லாம் மேடையோடு முடிந்து விடுகிறது.கால்நடைகளை கண்டுகொள்ள, அரவணைக்க யாருமில்லாத நிலையே தொடர்கிறது. இது குறித்து கால்நடைகளின் உரிமையாளர்கள் சிலர் கூறும் பொழுது நகரத்திற்குள் எங்களுக்கு மாடு வளர்க்க முன்பே போன்று போதிய இடமில்லை, அனைத்தும் வீடுகளாக வந்து விட்டது என்று கூறுகின்றனர். அது ஒருபக்கம் ஏற்க கூடியதாக இருந்தாலும் மறுபக்கம் கால்நடைகள் வெளியே செல்லும் பொழுது விபத்து ஏற்படாமல் தவிர்க்க இவர்களும் உடன் செல்ல முடியும்.

காலையில் சாலைக்கு சென்ற மாடுகளை மாலை மூன்று மணி அளவில் தான் தேடுகின்றனர் பால் விற்பனைக்காக, இதில் குறிப்பாக முக்கியமான தகவல் என்னவென்றால் சாலைகளில் கால்நடைகளுக்கு விபத்து ஏற்பட்டு கால் முறிந்த நிலையில் உயிருக்கு போராடினால் அதை கால்நடைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கவும் உரிமையாளர்கள் மறுக்கின்றனர், அந்த கால்நடையும் கண்ணீருடன் அதே இடத்தில் செத்து மடிகின்றன.கால்நடைகளின் உரிமையாளர்களே மனித உயிர்களும், கால்நடைகளும் விலைமதிக்க முடியாத அன்பால் கட்டபட்டவை, தயவு செய்து இனி சாலைகளில் சிதற வேண்டாம் இரத்த துளிகள் என்கிறார் இப்பகுதி சமூக ஆர்வலர் க.மகேஷ்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..