7 மாதங்களுக்கு முன்பாகவே காவலன் செயலியை அறிமுகப்படுத்திய பள்ளி

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடம் காவலன் செயலி தொடர்பாக ஏழு மாதங்களுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள் குவிகிறது.காவலன் செயலியை பள்ளி மாணவர்களிடம் அறிமுகப்படுத்தியது தொடர்பாக தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் காவல் துறை சார்பாக 7 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வசந்தி, தலைமை காவலர் கலா ஆகியோர் காவலன் செயலி தொடர்பாகவும் அதன் பயன்பாடு தொடர்பாகவும் நேரடி செயல் விளக்கம் அளித்து பேசினார்கள். இந்த செயல்பாடு பள்ளி மாணவர்களுக்கு , பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் உந்துதலாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

காவலன் செயலியின் நன்மைகள் என்ன? எவ்வாறு செயலியினை இயக்குவது?

காவலன் ஆப்பை பெற பிலேஸ்டோரில் சென்று காவலன் எஸ்.ஓ.எஸ் என தட்டச்சு செய்ய வேண்டும்.காவல்துறைக்கு உள்ள எம்பலம் போட்டு வரக்கூடிய செயலியை தொட வேண்டும்.பின்னர் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.காவலன் செயலியை திறந்த பிறகு நமது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.பின்னர் அவர்களுடையை பெயர் பதிவு செய்ய வேண்டும்.பிறந்த தேதி,பாலினம்,முகவரி பதிவு செய்து உள்ளே செல்லவேண்டும்.பின்னர் நம்பிக்கைக்குரியவர் பெயர்,முகவரி பதிவு செய்ய வேண்டும்.பின்னர் காவலன் செயலி உங்கள் மொபைலில் வந்து விடும்.

காவலன் செயலியால் என்ன நன்மை ?

குழந்தைகள் ,பெண்கள் ,ஆண்கள் அனைவரும் இந்த செயலியை பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.நீங்கள் எங்காவது ஆபத்தான கட்டத்தில் இருந்தால் இணைய வசதியுடன் இந்த செயலியை தொட்டாலே ஐந்து நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்தை சென்னை காவல் தலைமை அலுவலகத்தில் உங்கள் தற்போதைய இருப்பிடத்துடன் புகைப்படம் பதிவாகி,உங்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து காவலர் நீங்கள் இருக்கும் இடத்துக்கு வந்து விடுவார்கள்.உங்களுக்கு பாதுகாப்பு தருவார்கள்.எனவே நீங்கள் அனைவரும் உங்கள் பெற்றோரிடம் சொல்லி காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து உங்கள் மொபைலில் சேமித்து கொள்ளுங்கள்.நீங்கள் முதன் முறையாக காவலன் செயலி பதிவு செய்யும்போது உங்களுக்கு வேண்டியவர் என்று கொடுத்த மொபைல் எண்ணுக்கும் குறுந்தகவல் சென்று விடும். உங்களை எளிதாக பாதுகாக்கலாம்.

தேவையில்லாமல் இதனை தொடக்கூடாது.தொட்டால் ஐந்து நிமிடத்தில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து போன் வரும்.எனவே நமக்கு ஆபத்தான நேரம் என நினைக்கும்போது மட்டுமே இந்த செயலியை பயன்படுத்த வேண்டும்.நமக்கு தெரியாத நபர்கள் சாக்லேட்,பிஸ்கேட் கொடுத்தால் வாங்க கூடாது.இதனை கொடுத்து நம்மை ஏமாற்றி விடுவார்கள்.தவறான தொடுதல் செய்பவர்களை சட்டம் கடுமையாக தண்டிக்கும்.அதற்கென தனி சட்டங்கள் உள்ளன.பாதுகாப்பாக இருங்கள்.தைரியமாக பேசுங்கள்.நல்ல தொடுதல்,தவறான தொடுதல் பற்றி அறிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..