உசிலம்பட்டியில் தொடர் மின்தடையால் வியாபாரிகள் பாதிப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த ஒரு வாரமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் அன்றாட குடும்ப தேவைகளுக்காக வெளியூரிலிருந்து உசிலம்பட்டிக்கு வேலைக்கு வருகின்றனர். இதுபோன்று ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மின்தடை ஏற்பட்டால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மின்சார வாரியம் அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கின்றனர். உடனே சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மின் தடை ஏற்படுவது தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..