கார்த்திகை மாதம் என்பதால் அசைவத்தில் ஆர்வம் காட்டாத மக்கள்.

கார்த்திகை மாதம் வந்தாலே பொதுமக்கள் மாலை போட்டு பக்தி மயமாக காட்சியளிப்பர்.இதனால் இறைச்சி கடைகளில் விற்பனை மந்தமாக காணப்படும்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதிகளில் உள்ள இறைச்சிகடைகளில் மீன், சிக்கன். மட்டன் போன்ற அசைவங்களை வாங்க ஆளில்லாததால் இறைச்சி கடை சந்தையில் வெறிச்சோடி காணப்பட்டது. உசிலம்பட்டியில் வெங்காயத்தின் விலையை காட்டிலும் அசைவங்களின் விலை குறைவுதான். ஆனாலும் கூட வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபரிகள் தெரிவித்தனர். 1 கிலோ சிக்கன் 100ரூபாய்க்கும், மட்டன் 400ரூபாய்க்கும், மீன்கள் 100ரூபாய் முதல் 150 விற்பனை நடைபெறுகிறது.தினமும் 10 ஆடு விற்பனையாகும் நிலையில் தற்போது ஒரு ஆடு மட்டுமே உரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் 50 கோழிகள் விற்பனை செய்யப்படும் இடத்தில் 10 கோழிகள் மட்டுமே வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. காய்கறிகளின் விலை கூடிய போதும் மாலை போடும் சீசன் என்பதால் இறைச்சிகளின் விற்பனை மந்தமாகவே உள்ளன.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..