ராமநாதபுரம் எஸ்.பி., சோதனையில் மணோவி தீவில் சிக்கிய மர்மப்பொருள் பெட்டி

மன்னார் வளைகுடா மணாலி தீவு , முயல் தீவு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதாக
இராமநாதபுரம் எஸ்பி., வருண்குமாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதன்படி எஸ்பி., வருண்குமார் தலைமையில் எஸ்பி., இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ,எஸ்ஐகள் திபாகர்,ஜேசுதாஸ், குகனேஸ்வரன்ஆகியோர் நாட்டுப்படகில் மணாலி தீவு சென்றனர். சோதனையில் அங்கு கிடந்த உலோகப் பெட்டியை கைப்பற்றி சீனியப்பா தர்கா கடற்கரை கொண்டு வந்தனர். மர்மப் பொருள் பெட்டியை ராமநாதபுரம் சப் கலெக்டர் சுகபுத்ரா பார்வையிட்டார்.இது குறித்து எஸ்பி வருண்குமார் கூறுகையில்: இன்று காலை எனக்கு கிடைத்த தகவல் படி மணாலி தீவு, முயல் தீவு பகுதிகளில் தனிப்பிரிவினருடன் சென்று சோதனை செய்தோம். அங்கு கிடந்த 830 கி.கி., வெடிபொருட்கள் என எழுதிய உலோகப் பெட்டியை கைப்பற்றினோம். அப்பெட்டியை சோதனை செய்ய வெடிகுண்டு தடுப்பு குழுவினருக்கு வரவழைப்பட்டுள்ளனர். சட்ட விரோத பொருட்கள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதாக தெரிகிறது. சந்தேக நபர்கள் யாரும் தென்பட்டால் 94899 19722 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். தகவல் தெரிவிப்பவருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றார்.

Hala’s New Look With Authentic Taste

Hala’s New Look With Authentic Taste

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image