ராமநாதபுரத்தில் சிலம்பாட்ட போட்டி தங்கம் வென்றோருக்கு பாராட்டு

தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவியர் மாநிலப் போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்த சிலம்பாட்ட போட்டியில், ராமநாதபுரம், மண்டபம், பரமக்குடி கல்வி மாவட்ட கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.இதில் ராமநாதபுரம் டிடி விநாயகர் மேல்நிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர் லோ. ஆகாஷ், ஏவிஎம்எஸ் 9 ஆம் வகுப்பு மாணவி சு.ஹாரிணி, செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவர் நா.நவீன்குமார் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று முதலிடம் பிடித்தனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணாக்கர், சிலம்பாட்ட பயிற்சியாளர் லோக சுப்ரமணியன் ஆகியோரை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி பாராட்டினார்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image